தென்னிந்தியாவில் கட்டுமானப்பணி, உட்கட்டமைப்பு உருவாக்கம், சுரங்கப்பணி மற்றும் திரட்டல் பணிகள் ஆகிய தளங்களில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக சென்னையை சேர்ந்த விஷ்ணு சூர்யா புராஜெக்ட்ஸ் – இன்ஃப்ரா லிமிடெட் இயங்கிவரும் நிலையில், என்எஸ்ஈ (தேசியப் பங்கு சந்தை) எமெர்ஜ் தளத்தில் ஒரு பங்கிற்கு ரூ. 76 என்ற விலையில் தனது செயல்பாட்டை அது தொடங்கியிருக்கிறது. இதன் பங்கு வெளியீடு விலையான ரூ. 68 என்பதை விட ஏறக்குறைய இது 12% அதிகமாகும்.
இந்நிறுவனத்தின் ஐபிஓ என்ற புதிய பங்கு வெளியீடு 2023, செப்டம்பர் 29, வெள்ளி அன்று தொடங்கி அக்டோபர் 5, வியாழனன்று நிறைவடைந்தது. 73,50,000 சமப்பங்குகள் என்ற புதிய பங்கு வெளியீட்டை கொண்டிருந்த இந்த ஐபிஓ – க்கு 44 மடங்குகள் என்ற அளவிற்கு மிக பிரம்மாண்டமான சப்ஸ்கிரிப்ஷன் கிடைத்திருந்தது. 31,44,000 பங்குகள் என்ற அளவிற்கு பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள், பங்குச் சந்தை வர்த்தகத்தில் கைமாறின.
தனது ஐபிஓ – ஐ வெற்றிகரமாக நிறைவு செய்த இந்நிறுவனம் அதன் மூலம் ரூ. 49.98 கோடி நிதியை திரட்டியிருக்கிறது.
பங்கு வெளியீட்டின் மூலம் கிடைத்த நிதியைக் கொண்டு தனது நடப்பு மூலதன தேவைகளை பூர்த்தி செய்யவும் மற்றும் நீண்டகால கடன்களை முழுமையாக அல்லது பகுதியளவு திரும்பச்செலுத்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
விஷ்ணுசூர்யா புராஜெக்ட்ஸ் நிறுவனம் 1996 – ம் ஆண்டில் தொடங்கப் பட்டதாகும். ஐபிஓ – புதிய பங்கு வெளியீடுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆதரவு மற்றும் வரவேற்பிற்காக முதலீட்டாளர்களுக்கு தங்களது மனமார்ந்து நன்றியை இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் எஸ். நீலகண்டன், வி. சனால் குமார் தெரிவித்தனர்.