fbpx
Homeபிற செய்திகள்மேத்ஒர்க்ஸ் ஆட்டோமோட்டிவ் மாநாடு நிறைவு

மேத்ஒர்க்ஸ் ஆட்டோமோட்டிவ் மாநாடு நிறைவு

கணிதக் கம்ப்யூட்டிங் மென்பொருளின் முன்னணி டெவலப்பரான மேத்ஒர்க்ஸ் புனே மற்றும் சென்னையில் தனது இரண்டாவது MathWorks ஆட்டோமோட்டிவ் மாநாட்டை 2023 முடித்துள்ளது.

மாநாட்டில், நாடு முழுவதும் உள்ள பொறியாளர்கள், வாகனத் தொழில் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்து, வாகனத் துறையில் சமீபத்திய போக்குகள், புதுமைகள் மற்றும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

மேத்வொர்க்ஸின் பொறியியல் இயக்குநர் ராமமூர்த்தி மணி “சாஃப்ட்வேர்-வரையறுக்கப்பட்ட வாகனங்களை மாடல் அடிப்படையிலான வடிவமைப்பு மூலம் கட்ட மைத்தல்” என்ற முக்கிய உரையை நிகழ்த்தினார்.

மேத்ஒர்க்ஸ் இந்தியாவின் நாட்டுத் தலைவர் சுனில் மோட்வானி கூறுகையில், மேத்ஒர்க்ஸ் ஆட்டோமோட்டிவ் மாநாடு 2023 சென்னை மற்றும் புனேவில் நடந்தது. இதில் கிடைத்த வெற்றியால் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த நிகழ்வு வாகனத்துறையில் மென்பொருள்- வரையறுக்கப்பட்ட வாகனத்தின் செல்வாக்குமிக்க பங்கை எடுத்துக்காட்டுகிறது. MATLAB® மற்றும் Simulink® எவ்வாறு வாகனப் பொறியாளர்களுக்கு தொழில்துறையில் புதுமைகளை உருவாக்க உதவ முடியும் என்பதைக் காட்டுகிறது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img