சென்னையில் 1994 ஆக்ஸ்ட் 6-ம் தேதி தொடங்கப்பட்ட ‘இந்தியக் குருதிநாள அமைப்பு’ இன்று ‘தேசிய குருதிநாளம் தினத்தை’ நாடு முழுவதும் கொண்டாடியது.
இந்த நாளில் சென்னை உள்பட இந்தியாவிலுள்ள 26 நகரங்களில், ‘உடலுறுப்பு நீக்கம் இல்லாத இந்தியா’ என்னும் மையநோக்கத்துடன்,
‘புன் னகையுடன் ஒரு மைல் தூரம் நடை பழகுங்கள்’ என்னும் செய்தியுடன், விழிப்புணர்வை உண்டாக்க ‘வா கதான்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ராணிப்பேட்டை வளாகம் தொடங்கி, சிஎம்சி வேலூர் வரை இந்த ‘வாக்கத்தான்’ நடைபெற்றது.
ஃபிட் இந்தியாவுக்கான பாரதப் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், சுகாதாரம், விழிப்புணர்வு, கீழ் மூட்டு உடலுறுப்பு நீக்கத்துக்கு (நீரிழிவு, புகைபிடித்தல், ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு) வழிவகுக்கும் சூழலை உரிய நேரத்தில் தடுக்கும் வகையில் தேசிய அளவிலான கவனத்தை ஈர்க்க விஎஸ்ஐ ‘வாக்கத்தான்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
மூத்த குருதிநாள அறுவை சிகிச்சை நிபுணரும், இந்தியக் குருதிநாள அமைப்பு – வேலூர் முதன்மை அமைப்பாளருமான டாக்டர் தீபக் செல்வராஜ் கூறியதாவது:
விரிவான குருதிநாள சுகாதாரப் பாதுகாப்பு வழங்கு அமைப்பு மூலம், உடலுறுப்பு நீக்கம் இல்லாத இந்தியா என்னும் இலக்கை எட்ட, ஆரோக்கிய சமூகங்களை உருவாக்க வேண்டும் என்பதே நோக்கமாகும்.
வாழ்க்கை முறை மாற்றங்களால் உடலுறுப்பு நீக்கத்தைத் தடுக்க முடியும். சிகிச்சையை விரைந்து தொடக்கத்திலேயே ஆரம்பித்தால் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும் என்றார்.
இம்முனைவுக்கு ஆதரவளிக்க டாக்டர் பிரபு பிரேம்குமார் உள்ளிட்ட மூத்த குருதிநாள நிபுணர்களும் பங்கேற்றனர்.