ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வரும் வியா ழக்கிழமை உலக கண் பார்வை நாளாக அனுசரிக்கப்படுகிறது. கண்பார்வை இழப்பு, கண் பார்வையின்மை, கண்களின் மீது செலுத்த வேண்டிய கவனம் போன் றவை பற்றிய விழிப் புணர்வை ஏற்படுத்த ஆர்.எஸ்.புரம் கிளை வாசன் ஐ கேர் மருத்து வமனையும் லயன்ஸ் கிளப் பவுண்டேஷனும் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணி இன்று (11-ந்தேதி) நடைபெற்றது.
இதில் எஸ்.என்.எஸ்., கல்லூரி மாணவர்கள், வாசன் ஐ கேர் மருத்துவமனையின் பணியாளர்கள் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு பேரணி ஆர்.எஸ் புரம் வாசன் ஐகேர் மருத்து வமனையில் இருந்து புறப்பட்டு ஆர்.எஸ்.புரம், காந்தி பார்க் தடாகம் ரோடு வழியாக சென்று மீண்டும் புறப்பட்ட இடம் அருகே சென்றடைந்தது.
முன்னதாக இந்த விழிப்புணர்வு பேர ணியை கோவை தெற்கு மாநகர காவல் துணை ஆணை யாளர் க.சண்முகம், சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைத்தார்.
இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணத்தலைவர் டாக்டர் அழகு ஜெய பாலன் ரோட்டரி 3201 மாவட்ட இயக்குனர் எஸ்.கோகுல்ராஜ், ஆர்சிசி தலைவர் ஆர்.டி கணேசன், கண் நரம்பியல் மற்றும் ஃபாகோ அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கிருபா பால், விழிதிரை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அனுசா வெங்கட்ராமன்கருவிழி மற்றும் கண் புறை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெயமணிகண்டன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
உலக பார்வை தினத்தை முன்னிட்டு வரும் நவம்பர் 15ம் தேதி வரைஅனைத்து வாசன் ஐ கேர் மருத்துவமனைகளிலும் இலவச கண் பரிசோதனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.