37வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு ஈரோட்டில் வாசன் கண் மருத்துவமனை சார்பில் வாகன ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச கண புரை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலர் நித்யா, சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பதைப் போல ஓட்டுனர்களுக்கு கண்பார்வை மிக முக்கியம். ஆண்டிற்கு ஒரு முறை அவர்கள் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
வாகனங்களை இயக்கும் பொழுது அதிக விபத்துகள் கண்பார்வை குறைபாடுகளால் ஏற்படு வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
கண்களில் சிறு சிறு குறைபாடுகள் இருந்தாலும் உடனடியாக மருத்துவர்களை பார்த்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் வாகன ஓட்டுநர்கள் முதல் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மருத்துவர்கள் ஆலோசனைகள் ஏற்று கவனமாக பராமரிப்பு செய்ய வேண்டும். மருத்து வர்களுக்கு இணையாக ஓட்டுநர்கள் இருக்கிறார்கள். ஏனென்றால் மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வரக்கூ டிய நோயாளிகளை காப்பாற்றுகிறார்கள்.
அதைப் போலவே பாதுகாப்பாக பயணம் செய்பவர்களின் உயிர்களுக்கு ஓட்டுநர்களே பாதுகாப்பை தருகின்றனர். ஒவ்வொரு நாளும் விபத்தில்லா உலகத்தை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியுடன் ஓட்டுநர்கள் செயல்பட வேண்டும். என கேட்டுக் கொண்டார்.
இதில் மாவட்ட போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் வித்யா, போக்குவரத்து ஆய்வாளர் ரமேஷ், ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் துரைசாமி, மருத்துவர்கள் சிந்தனை, மனோரமா எஸ்.பஹோதி, சரண்யா, ப்ரீத்தி மதுபாலா, பொதுமேலாளர் வெங்கடேஷ், மண்டல மேலாளர் செல்வம், மார்கெட்டிங் மேலாளர் ஜெகதீஸன், கோவிந்தராஜ், தமிழ்செல் வன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதில் ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.



