fbpx
Homeபிற செய்திகள்வாணவராயர் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர் மன்றம் துவக்க விழா

வாணவராயர் வேளாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர் மன்றம் துவக்க விழா

பொள்ளாச்சி, மணக்கடவில் உள்ள வாணவராயர் வேளாண்மை கல்வி நிறுவ னத்தில் மாணவர் மன்றம் துவக்க விழா நடைபெற்றது. கல்வி நிறுவன முதல்வர் பிரபாகர் தலைமை வகித்தார்.

வாணவராயர் வேளாண்மை கல்வி நிறுவன இயக்குநர் கெம்புசெட்டி வாழ்த்தி பேசினார். மாண வர் மன்ற உதவி ஆலோசகர் சங்கரி வர வேற்றார். கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர் நல மைய முதன்மையர் மரகதம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். அதைத் தொடர்ந்து மாணவர் மன்றத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இவ்விழாவில் மாணவர் மன்ற துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இணை பேராசிரியர் ரவிக்குமார் செய்திருந்தார். மாணவர் மன்ற தலைவரும், வேளாண்மை படிப்பு இறுதி ஆண்டு மாணவருமான வீர.கௌதம் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img