Homeபிற செய்திகள்கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் ‘தனிப்பெரும் கருணை தினம்’

கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் ‘தனிப்பெரும் கருணை தினம்’

கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் வள்ளலாரின் 203-ஆவது அவதாரப் பெருநாளான ‘தனிப்பெரும் கருணை தினம்’ அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கமாக அருட்பெருஞ்ஜோதி தீபம் ஏற்றப்பட்டு, திருவருட்பா அகவற்பா பாராயணம் செய்யப்பட்டது. தொடர்ந்து வள்ளலாரின் வாழ்வியல் மற்றும் போதனைகள் குறித்து மாணவிகள் உரையாற்றினர். வடலூர் சத்திய ஞானசபை, சத்திய தருமசாலை ஆகியவற்றின் சிறப்புகளை விளக்கும் நிகழ்ச்சியும், அருட்பெருஞ்ஜோதி பாடல்களும் மாணவிகளால் நிகழ்த்தப்பட்டன. நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளரும் செயலருமான பி.என்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். துணை முதல்வர் எஸ்.ஏ. தனலட்சுமி, பல்வேறு துறை முதன்மையர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img