Homeபிற செய்திகள்பெருந்துறை சிப்காட் பகுதி கிராமங்களுக்கு குடிநீர் வழங்க ரூ.45 கோடியில் திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில்...

பெருந்துறை சிப்காட் பகுதி கிராமங்களுக்கு குடிநீர் வழங்க ரூ.45 கோடியில் திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஆலோசனை

பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையைச் சுற்றியுள்ள ஆறு ஊராட்சிகளுக்கு தினமும் 30 லட்சம் லிட்டர் (3 எம்எல்டி) குடிநீர் வழங்கும் வகையில், சிப்காட் குடிநீர் விநியோகத் திட்டத்தை ரூ.45 கோடியில் மேம்படுத்தும் திட்டம் குறித்து வியாழக்கிழமை ஆலோசிக்கப்பட்டது.

பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் தேர்ந் தெடுக்கப்பட்ட 10 நாட்களில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகத்தில் இணைந்தார். விரைவில் பெருந்துறை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடை பெற உள்ள சூழலில், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தலைமை வகித்தார். கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வி.கே.ராஜீவ், மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தத் திட்டத்தின் மூலம் ஈங்கூர், வரப்பாளையம், வாய்பாடி, முகாசிபாளையம், புஞ்சை பாலத்தொழுவு, சிறுகடத்து ஆகிய ஊராட்சிகளுக்கு தினமும் 3 எம்எல்டி குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் ஆழ்குழாய் கிணற்று நீரைப் பயன்படுத்த முடியாத நிலையில், தற்போது சென்னிமலை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. திட்டத்தின் கீழ் தற்போதைய நீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் புனரமைத்தல், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீரேற்று அறைகள் அமைத்தல், பம்புகள் மற்றும் குழாய்கள் நிறுவுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

சிப்காட் நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமான சிணிஜிறி பணி களின் முன்னேற்றம், ஈங்கூர் குடிநீர் திட்டத்துக்கு சிஷிஸி நிதி திரட்டுவது குறித் தும் கூட்டத்தில் ஆலோசி க்கப்பட்டது. சிணிஜிறி மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகளை நிர்ணயி க்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கவும், தேவையான பணியாளர்கள் மற்றும் கட்டுமானப் பொருள் கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவும் அமைச்சர்கள் அறிவுறுத் தினர். பணிகளின் தரம் மற்றும் பாதுகாப்பு விதி களைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, சிப்காட் வளாகத்தில் கட்டப்பட்டு வரும் புதிய சிணிஜிறியை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

படிக்க வேண்டும்

spot_img