fbpx
Homeபிற செய்திகள்யுனைடெட் கல்விக் குழுமத்தில் தேசிய யோகா தின விழா

யுனைடெட் கல்விக் குழுமத்தில் தேசிய யோகா தின விழா

பெரியநாயக்கன் பாளையத்தில் செயல்பட்டு வரும் யுனைடெட் கல்விக் குழுமங்களில் சார்பாக ஒன்பதாவது தேசிய யோகா தின விழா கல்லூரி வளாகத்தில் மாணவ மாணவிகளால் கொண்டாடப்பட்டது.

மாணவ மாணவிகள் 12 படிநிலைகளைக் கொண்ட சூரிய நமஸ்கார் மற்றும் 108 ஓம் மந்திரங்கள் அனைத்து மாணவர்களாலும் பின் தொடரப்பட்டது. மாணவர்களின் யோகாசனங்களை பிரமிடு முறையில் செய்து காட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுடெல்லி ஹவுசிங் அண்ட் அர்பன் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் இயக்குனர் சபிதா போஜன் பங்கேற்று பேசியதாவது: இயற்கை மீதும் தமிழ் இலக்கியத்தின் மீதும் மக்கள் அதிகம் பற்றுடன் இருக்க வேண்டும்.

மாணவப் பருவத்தில் யோகாசனங்கள் மற்றும் தியானங்களின் மூலம் வரும் கால சமுதாயத்தை நல்ல முறையில் கொண்டு செல்ல முடியும். மாணவர்கள் படிப்புடன் விளையாட்டு யோகாசனங்கள் செய்வதன் மூலம் தங்களை சமுதாயத்தில் சிறந்த குடிமக்களாக மாற்றிக் கொள்வார்கள் என்பதில் சிறிது அளவு ஐயமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து கல்லூரியின் முதல்வர்கள் மற்றும் யுனைடெட் கல்விக் குழுமங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வித்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img