யூனியன் பாங்க் ஆப் இந்தியா சேலம் பிராந்தியத்தின் சார்பில் 80 வது சுதந்திர தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. பிராந்திய அலுவலகத்தில் பிராந்தியத்தின் தலைவர் மற்றும் துணைப் பொது மேலாளர் பி.எம். செந்தில்குமார் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவிற்கு வந்தவர்களை நிம்மி பீட்டர் வரவேற்றார். சுதந்திர தின சிறப்பு குறித்தும், நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களைப் பற்றியும் பிராந்திய தலைவர் பி.எம். செந்தில்குமார் எடுத்துரைத்தார். பின்பு வங்கி அலுவலர்களுடைய குழந்தைகளின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கு பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் 100க்கும் மேற்பட்ட வங்கி அலுவலர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



