Homeபிற செய்திகள்மோதூர் பசுமைத் திட்டம் தொடக்கவிழாவில் 1000 மரக்கன்றுகள் நடவு

மோதூர் பசுமைத் திட்டம் தொடக்கவிழாவில் 1000 மரக்கன்றுகள் நடவு

கோவை திருச்சி சாலை, சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயம் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள “மோதூர் பசுமைத் திட்டம்” இன்று சிறப்பாகத் தொடங்கப்பட்டது.


இத்திட்டத்தை சிஎஸ்ஐ பேராயர் அருட்திரு பிரின்ஸ் கால்வின் கல்வெட்டைத் திறந்து வைத்து முறைப்படி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் மரக்கன்றுகளை நட்டு, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.


பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராயர் பிரின்ஸ் கால்வின் உரையாற்றுகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மரங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். குறிப்பாக வேளாண் காடுகள் (Agro Forestry) மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன், நிலத்தின் வளத்தையும் மேம்படுத்த முடியும் எனக் குறிப்பிட்டார். மேலும், எதிர்கால தலைமுறையின் நலனைக் கருத்தில் கொண்டு அனைவரும் அதிக அளவில் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மோதூர் பசுமைத் திட்டத்தின் ஒரு பகுதியாக 1,000 மரக்கன்றுகள் இன்று நடப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைத் தோட்டப் பகுதியும் இந்நிகழ்வில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அருட்திரு ஸ்டீபன் எபினேசர், அருட்திரு சாந்தகுமார், அருட்திரு ஆபிரகாம், ஆலயச் செயலாளர் ஜெ.ஏ.பரமானந்தம், பொருளாளர் அருண் ஆனந்தராஜ், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆடம் அப்பாதுரை, ஒருங்கிணைப்பாளர் காட்வின் கோயில், திட்டப் பொறுப்பாளர்கள் ஸ்ரீனிவாஸ் மற்றும் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை வளர்ப்பு மற்றும் நிலையான வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், மோதூர் பசுமைத் திட்டத்தைத் தொடர்ந்து பல்வேறு பசுமை நடவடிக்கைகளை ஆலய நிர்வாகம் முன்னெடுக்க உள்ளது.

படிக்க வேண்டும்

spot_img