fbpx
Homeபிற செய்திகள்பிரீமியம் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் நடவடிக்கை

பிரீமியம் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் நடவடிக்கை

உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் என்பது முன்னணி ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் ஆகும். இது பிரீமியம் வாடிக்கையாளர் பிரிவினருக்கு மாக்சிமா சேமிப்பு கணக்கு, பிசினஸ் மாக்சிமா நடப்பு கணக்கை அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு வங்கி அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் இந்த புதிய சலுகை, சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வங்கியின் மேலாண்மை இயக்குநரும், முதன்மை செயல் அலுவலருமான இட்டிரா டேவிஸ் கூறுகையில், ‘’எங்களின் சமீபத்திய சலுகைகள் மூலம், பிரீமியம் பலன்கள், தனிப்பயனாக்கப்பட்ட சேவைகள் மற்றும் பிரத்யேகமான டீல்கள் ஆகியவற்றின் தொகுப்பை வழங்குவதன் மூலம் வங்கியின் பிரத்தியேக அனுபவத்தின் தரத்தை உயர்த்த முயற்சிக்கிறோம்.

பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு எங்களின் தீர்வுகள் மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும்‘’ என்றார். மாக்சிமா சேமிப்பு கணக்கு, பிசினஸ் மாக்சிமா நடப்பு கணக்கு சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்ட 30 நாள்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அவற்றை தேர்வு செய்துள்ளனர்.

இந்த இரண்டு கணக்குகளுக்கும் ரூபே டெபிட் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இது சுகாதார சேவைகள், தனித்துவமான வணிக சலுகைகள், விமான நிலைய ஓய்வறை அணுகல், பிரீமியம் சுகாதார சோதனை ஆகிய சலுகைகளை வழங்குகிறது.

படிக்க வேண்டும்

spot_img