பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் ரேவியா கியர், டிரான்ஸ்மிஷன் ஆயிலை அறிமுகம் செய்துள்ளது. பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் பிரேக்கிங் சிஸ்டம் உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது.
3 பில்லியன் டாலர் மதிப்புகொண்ட டிஎஸ்எஃப் குழுமத்தின் ஒரு பகுதியான பிரேக்ஸ் இந்தியா, பாதுகாப்பு மற்றும் தரத்துக்காக உலகளாவிய வாகனத் துறையில் மதிப்புமிக்க நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனம் புதிய “ரேவியா” கியர் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் லூப்ரிகண்ட்ஸ் துறையில் இந்நிறுவனம் அடியெடுத்து வைத்தது. இதுகுறித்து பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் சுஜித் நாயக் கூறுகையில், ‘’தரம் மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் பிரேக்ஸ் இந்தியா நிறுவனம், ரேவியா பிராண்டிலும் இந்த வாக்குறுதியை நிறைவேற்றும்.
தயாரிப்பு விரிவாக்கங்களுடன் எங்கள் பிராண்டை தொடர்ந்து வளர்த்து வருவதால், இப்போது கியர் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆயிலை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது பயணிகள் கார்கள் மற்றும் வணிக வாகன வாடிக்கையாளர்களுக்கு உதவுகிறது” என்றார்.
முதல் கட்டமாக, 80W90 மற்றும் 85W140 ஆகிய இரண்டு தரங்கள் அறிமுகப்படுத்தப்படும். அவை தீவிர அழுத்தத்தை தாங்கும் வகையிலும், அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.