தூத்துக்குடி முத்தம்மாள் காலனி கம்மவார் நலச்சங்கம் சார்பில் கலை ஞர் அரங்கில் யுகாதி திருவிழா நடைபெற்றது. ஐஎன்டியுசி தலைவர் கதிர்வேல் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற எஸ்ஐ முருகன் வரவேற்றார்.
அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி பெருமாள் சாமி என்ற ராஜ், ரமேஷ் குமார் ஆகியோர் கம்மவார் சமுதாயம் முன்னேற்றம் குறித்து கருத்துரை வழங்கினார்கள்.
கல்வி மற்றும் அரசு பொது தேர்வுகள், சிவில் சர்வீஸ் தேர்வுகள் மற்றும் டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டி தேர்வுகளில் மாணவர்கள் எவ்வாறு எளிதாக தேர்ச்சி பெற முடியும் என்பதை டிஎன்பி எஸ்சி பயிற்சியாளர் ராமகிருஷ்ணன் விளக்கி கூறினார்.
கல்வி விளை யாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற வர்களுக்கும் அபாகஸ் படிப்பில் முதல் பரிசு பெற்ற மாணவி ஹர்சஸ்ரீ ஸ்ரீதர் மற்றும் 10 மற்றும் 12 ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மானவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
டாக்டர் முருகலட்சுமி சுரேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னதாக கலைஞர் அரங் கில் திருமண தகவல் பதிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான சங்க உறுப்பினர்களும் சமுதாய மக்களும் திருமண வரன் குறித்து பதிவு செய்தனர்.
நிகழ்ச்சியில் மாணவர் களின் சிலம்பாட்டம், சுருள் வாள் சாகசம் மற்றும் மாணவிகளின் நட னங்கள் நடைபெற்றன. நிகழ்வில் போல்போட்டை திமுக வட்ட பிரதிநிதி பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்குபெற்றனர்.
யுகாதி திருவிழா ஏற்பாடுகளை கம்மவார் சங்க ஒருங்கிணைப்பாளர் லிங்கையன், முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ராஜாமணி மற்றும் கம்மவார் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.



