fbpx
Homeபிற செய்திகள்கோவை செம்மொழி பூங்காவில் கிறிஸ்தவ மிஷனரி ராபர்ட் கால்டுவெல்லுக்கு நினைவுச் சின்னம் - கலெக்டரிடம் மனு

கோவை செம்மொழி பூங்காவில் கிறிஸ்தவ மிஷனரி ராபர்ட் கால்டுவெல்லுக்கு நினைவுச் சின்னம் – கலெக்டரிடம் மனு

கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் இடத்தில் திராவிட மொழிகளுக்கெல்லாம் தமிழ் மொழி தான் செம்மொழி என்று அறிவித்த கிறிஸ்தவ மிஷனரி ராபர்ட் கால்டுவெல்லுக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்று அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பின் தலைவர் சகாயராஜ் தலைமையில் நிர்வாகிகள் கோவை மாவட்ட் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மனுவில் கூறியிருப்பதா வது: கிறிஸ்தவ திருச்சபைகளுக்கு நல வாரியம் வேண் டுமென பல வருடங்களாக தமிழக அரசுக்கு அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பின் மூலம், அனைத்து திருச்சபை ஊழியங்களின் சார்பாக பல கோரிக்கைகளை முன் வைத்தோம்.

தற்போது அமைந்துள்ள திராவிட மாடல் ஆட்சியை தருகின்ற திமுக அரசின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரலாற்று சாதனை படைக்கும் வண்ணம் அனைத்து மதங்களையும் நேசிக்கும் முதல்வராக, முஸ்லிம் மதத்தினருக்கு உலமாக்கள் நலவாரியம் இருப்பது போல, இந்து கோவில்களில் பூசாரிகளுக்கு நல வாரியம் இருப்பது போல, தற்போது கிறிஸ்தவ திருச்சபை ஊழியர்களுக்கும் நல வாரியம் அமைத்து அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார்.

திருச்சபை

தமிழக முதலமைச்சருக்கும், சிறுபான்மை துறை அமைச்சருக்கும் கிறிஸ்தவ கூட்டமைப்பின் சார்பில் கிறிஸ்துவ திருச்சபை ஊழியர்களின் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் கிறிஸ்தவரின் நீண்ட நாள் கோரிக்கை யான கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் இடத்தில் திராவிட மொழிகளுக் கெல்லாம் தமிழ் மொழி தான் செம்மொழி என்று அறிவித்த கிறிஸ்தவ மிஷனரி ராபர்ட் கால்டுவெல் அவர்களுக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும். இதில் அவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img