fbpx
Homeபிற செய்திகள்வல்லநாடு சரணாலயத்தில் வண்ணத்துப்பூச்சி திருவிழா - கனிமொழி எம்.பி தொடங்கினார்

வல்லநாடு சரணாலயத்தில் வண்ணத்துப்பூச்சி திருவிழா – கனிமொழி எம்.பி தொடங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு வெளிமான் சர ணாலயத்தில், கிள்ளிகுளம் வேளாண் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தில், தமிழ்நாடு அரசு வனத்துறை மற்றும் மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம் இணைந்து நடத்தும் வல்லநாடு வண்ணத்துப்பூச்சி 2022.

திருவிழாவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார்.
நிகழ்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் வரவேற்புரையாற்றினர். தொடர்ந்து வல்லநாடு வெளிமான் சரணாலயத்தை சிறப்பு விருந்தினர்களுடன் சுற்றிப் பார்த்த கனிமொழி எம்.பி, தொலை நோக்கி கருவியின் மூலமாக வண்ணத்துப்பூச்சிகளை கண்டு ரசித்தார்.

பின்னர் மாவட்ட வனவியல் விரிவாக்கம் சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிய கனிமொழி எம்.பி, சரணாலயத்திற்கு வந்திருந்த பள்ளி மாணவ-, மாணவிகளுடன் இந்தியாவில் 1,500 வகையான வண்ணத்துப்பூச்சிகள் உள்ளது குறித்தும் இதில் மேற்குத் தொடர்ச்சி மலையில் 334 வகை வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன.

வல்லநாடு வெளிமான் சரணாலயம்

வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் சிவப்பு உடல் அழகி, ரோஜா அழகி, கறிவேப்பிலை அழகி, மரகத அழகி, எலுமிச்சை அழகி உள்ளிட்ட சுமார் 80 வகையான வண்ணத்துப்பூச்சிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.

இதனால் வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் வாரத்தில் சரணாலயத்தில் வண்ணத்துப்பூச்சிகள் அதிக அளவில் காணப்படும். பல பல வண்ணத்துப்பூச்சிகள் பறந்து செல்வது ரம்மியமாகக் காட்சி அளிக்கின்றது என்று கலந்துரையாடினார்.

இந்த வண்ணத்துப்பூச்சி திருவிழாவில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி முதல்வர் தேரடி மணி, மாவட்ட வனவியல் விரிவாக்கம் வனச்சரகர் சங்கரன், வனச்சரகர்கள் ஸ்ரீவைகுண்டம் பிருந்தா, விளாத்திகுளம் கவின், கோவில்பட்டி பாரதி, ஸ்ரீ வைகுண்டம் வனவர்கள் அப்பனசாமி, பழனி, கண்ணன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, சரவணக்குமார், ஜெயக்கொடி, சுரேஷ் காந்தி, சுப்ரமணியன், பகுதி செயலாளர் சிவகுமார், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விழாவில் திருநெல்வேலி புஷ்பலதா சிபிஎஸ்சி பள்ளி, தூத்துக்குடி மாநகராட்சி மேல்நி லைப்பள்ளி மாணவர்கள் பங்குபெற்ற வண்ணத்துப்பூட்சிகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், வண்ணம் தீட்டுதல் மற்றும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. விழா நிறைவில் ஸ்ரீ வைகுண்டம் வனச்சரகர் பிருந்தா நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img