காரமடை ஊராட்சி ஒன்றியம் ஜடையம்பாளையம் ஊராட்சியில் மேட்டுப்பாளையம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓகே சின்னராஜ் தொகுதி வளர்ச்சி நிதி 2019-2020 ரூபாய் 13 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையை சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ், ஊராட்சி ஒன்றிய தலைவர் மணிமேகலை மகேந்திரன், ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் ஆர்.கே.பழனிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் பி.டி.கந்தசாமி ,ஒன்றிய செயலாளர் எம்.எஸ். ராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் கோபால், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சி.ராமசாமி, உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.