fbpx
Homeபிற செய்திகள்முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த தினம் மற்றும் தூத்துக்குடி மாமன்ற பிரதிநிதிகள் பதவியேற்று ஓர் ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி மாநக ராட்சி தருவைகுளம் உரக்கிடங்கில் 70,000 மரக்கன்றுகள் நடும் விழாவின் துவக்கமாக 10,000 மரக்கன்றுகள் நடும் பணியினை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று (4ம் தேதி) துவக்கி வைத்தார்.

இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார், உதவி செயற்பொறியாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கோட்டுராஜா, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடன் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img