fbpx
Homeபிற செய்திகள்‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூத்துக்குடியில் இருந்து நிவாரண பொருட்கள்

‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூத்துக்குடியில் இருந்து நிவாரண பொருட்கள்

சென்னை மக்களுக்கு உதவும் வகையில், தூத்துக் குடி மாவட்ட மக் களிடம் இருந்து திரட்டப்பட்ட 5.36 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி, பருப்பு, பிஸ்கட்,
தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவைகள். 2 லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பப் பட்டது.

நிவாரணப் பொருட்கள் சென்ற லாரியை கலெக்டர் லட்சுமிபதி துவக்கி வைத்தார்.
பின்னர் கலெக்டர் கூறுகையில், சென்னையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு, அனுப்பப்பட்டு வருகிறது, தொடர்ந்து, இதுபோன்ற நிவாரண பொருட்கள் அனுப்பப் படும் என்றார்.

மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், டி.ஆர்.ஓ., அஜெய் சீனிவாசன், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் மாரியப்பன், வட்டார போக்குவரத்து அதிகாரி விநாயகம், பி.ஏ.ஜி., அமுதா, பேரிடர் மேலாண்மை தாசில்தார் வெங்கடாச்சலம், மேலாளர் இளங்கோ, பி.ஆர்.ஓ., நவீன்பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img