fbpx
Homeபிற செய்திகள்கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்- குன்னூர் மலை ரயில் இன்று ரத்து

கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்- குன்னூர் மலை ரயில் இன்று ரத்து

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இயக்கப்படும் மலை ரயில் போக்குவரத்து நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. அடர்ந்த வனப்பகுதியின் நடுவே பயணிக்கும் இந்த மலை ரயிலில் பயணம் செய்ய உள் நாடுகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் முன்பதிவு செய்து மாதக்கணக்கில் காத்திருந்து பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம் மற் றும் நீலகிரி பகுதியில் வட கிழக்கு பருவமழை துவங்கியது முதலே கன மழை பெய்து வருவதால் மலை ரயில் பாதையில் அடிக்கடி மன்சரிவு ஏற்பட்டு மலை ரயில் போக்குவரத்து தடைபடுகிறது.

இந்த கடந்த மாதம் நான்கு முறை மண்சரிவு ஏற்பட்டு மலை ரயில் பாதை சேதமடைந்ததால் மலை ரயில் போக்குவரத்து டிசம்பர் ஏழாம்
தேதி வரை மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே மலை ரயில் சேவை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து 8 ஆம் தேதியான இன்று நீண்ட இடைவேளைக்கு பிறகு அதாவது 14 நாட்களுக்கு பிறகு இன்று மலை ரயில் இயக்கப்பட இருந்த நிலையில் மேட்டுப்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் மழை பெய்து
வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒரு நாள் மட்டும் மேட் டுப்பாளையம் – குன்னூர் இடையே செல்லும் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்வதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் இன்று மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வத்துடன் ரயில் நிலை யம் வந்து காத்திருந்த பயணிகள் மிகுந்த ஏமாற் றம் அடைந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img