fbpx
Homeபிற செய்திகள்மதர் சோசியல் சர்வீஸ் டிரஸ்ட் சார்பில் பனைப்பொருள் உற்பத்தி தொழிலாளர்கள் 160 பேருக்கு தளவாடப் பொருட்கள்...

மதர் சோசியல் சர்வீஸ் டிரஸ்ட் சார்பில் பனைப்பொருள் உற்பத்தி தொழிலாளர்கள் 160 பேருக்கு தளவாடப் பொருட்கள் வழங்கல்

மதர் சோசியல் சர்வீஸ் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மதர் பனைப் பொருள் உற்பத்தியாளர் குழுவைச் சார்ந்த உறுப்பினர்கள் 160 பனைத் தொழிலாளர்களுக்கு தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் மற்றும் ரூ.12 லட்சம் மதிப் பிலான தளவாடப் பொருட்கள் வழங்கும் விழா உடன்குடி சொக்கன் குடியிருப்பு அதிசய மணல் மாதா ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் பனை தொழிலுக்கு சிறப்பு வாய்ந்ததாகும். அதி லும் உடன்குடி கருப்பட்டி என்றால் தனி சிறப்பு பெற்றிருக் கிறது. அதற்குக் காரணம் உடன்குடி கருப்பட்டி சுவை மிக்கதாகவும், மருத்துவ குணம் கொண்டதாகவும் இருந்து வருகிறது.

இதனால் உலக அளவில் உடன்குடி கருப்பட்டிக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது. ஆனாலும் பனைத் தொழில் மிகுந்த கஷ்டமான தொழில் என்பதினாலும், இடைத்தரகர்களின் செயல்பாட்டினாலும், பனை தொழிலாளிக்கு தகுந்த வருவாய் இல்லாத காரணத்தினாலும், பனைத் தொழிலை இழிவான தொழிலாக பார்த்த காரணத்தினாலும், பனைத் தொழிலாளர்கள் தொழிலை விட்டு வெளியேறினர். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பனை தொழில் நலிவடைந்து, அழிந்து வருகிறது.

இப்பகுதியின் பாரம்பரிய தொழிலை போற்றி பாதுகாக்க மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு அமைச்சகத்தின், கதர் கிராம தொழில்கள் ஆணையம் மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் மதர் பனை பொருள் உற்பத்தியாளர் குழுவை சார்ந்த உறுப்பினர்களுக்கு 5 நாட்கள் தொடர்ந்து 3 கட்டங்களாக பதநீர் மற்றும் கருப்பட்டியில் மதிப்பு கூட்டுப் பொருட்கள் தயாரிக்க தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி பெற்ற பனைத் தொழிலாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் கருப்பட்டி காய்ச்ச தேவையான தளவாட பொருட்கள் வழங்கும் விழா சொக்கன் குடியிருப்பு அருகே உள்ள அதிசய மணல் மாதா ஆலய வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு வருகை தந்தவர்களை மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான டாக்டர் எஸ்.ஜே. கென்னடி வரவேற்றார். சென்னையில் மத்திய பனை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய முதல்வர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக மாநில கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணைய உதவி இயக்குனர் செல்வி கருணாநிதி குத்து விளக்கு ஏற்றி பனைத் தொழிலாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் தளவாட பொருட்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

அதனைத் தொடர்ந்து தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் பி.கே.பவுலோஸ், தூத்துக்குடி சர்வோதய சங்க செயலாளர் சி.இராஜன், மத்திய பனை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய உதவி இயக்குனர் மு. பிரபாகரன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தளவாட பொருள்கள்

விழாவில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற மதர் பனை பொருள் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களின் குடும் பத்தைச் சார்ந்த பனை தொழில £ளர்களுக்கும் ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பதநீர் காய்ச்சி கருப்பட்டி தயார் செய்ய தேவையான 1 கடாய், பதநீரை சேமித்து எடுத்துவர 10 லிட்டர் அளவு கொண்ட 4 கேன் , கருப்பட்டி ஊற்ற 4 மர அச்சு , 1 மர துடுப்பு , 1 எல்பிஜி பர்னர் மொத்தம் 11 வகையான தளவாட பொருள்கள் வழங்கப்பட்டது.

இதில் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழி லாளர் மேம்பாட்டு இயக்க மாநில துணைத் தலைவர் ஏ.பொ.சுதாகர், தென் மண்டல ஒருங்கிணைப்பாளரும், தூத்துக் குடி மாவட்ட தலைவருமான ராஜ்கமல், மாவட்ட துணைத் தலைவர் இம்மானுவேல், காயல்பட்டினம் நகர தலைவர் காயல் பாலா, மதர் பனைப் பொருள் உற்பத்தியாளர் மகளிர் குழுக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஜெப செல்வி, தமிழரசி, ஆலிஸ் மேரி, தமிழ்ச் செல்வி, இந்து, ஷர்மிளா, புனிதா மற்றும் உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண் னர். மதர் சமூக சேவை நிறு வன ஒருங்கிணைப்பாளர் எஸ்.பானுமதி கூறினார்.

இதற்கான ஏற்பாடுகளை மத்திய பனை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய உதவி இயக்குனர் பிரபாகரன், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ்.ஜே. கென்னடி, ஒருங்கிணைப்பாளர் எஸ். பானுமதி ஆகியோர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img