fbpx
Homeபிற செய்திகள்மேல்நிலை குடிநீர் தொட்டியை திறந்து வைத்த வி.பி.கந்தசாமி எம்எல்ஏ

மேல்நிலை குடிநீர் தொட்டியை திறந்து வைத்த வி.பி.கந்தசாமி எம்எல்ஏ

சூலூர் தொகுதிக்குட்பட்ட கணியூர் ஊராட்சியில் சந் தோஷ் நகர், லட்சுமி நகர், தண்ணீர் பந்தல் பகுதிகளில் மாவட்ட குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன் நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை, வடிகால் அமைக்கும் பணியையும், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் முடிவடைந்த தரைமட்ட தொட்டி, மேல்நிலை தொட்டியை சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

வடக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் கந்தவேல், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் தோப்பு கா.அசோகன் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்வில் கருமத்தம்பட்டி நகர செயலாளர் ஆதவன் கே.பிரகாஷ், கணியூர் ஊராட்சி தலைவர் வேலுச் சாமி, சூலூர் கார்த்தி, லோகநாதன், செல்வகுமார், வார்டு கவுன்சிலர்கள் ஒப்பந்ததாரர் குணா மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண் டனர்.

படிக்க வேண்டும்

spot_img