fbpx
Homeபிற செய்திகள்எப்போதும்வென்றான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்றார்

எப்போதும்வென்றான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்றார்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் எப்போதும்வென்றான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு நூறாவது ஆண்டு (1924-2024) நிறைவு பெற்றதை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலா ளருமான கீதா ஜீவன் கலந்துகொண்டு பள்ளி வளாகத்தில் மரகன்று களை நட்டினார்.

நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி. ஐஸ்வர்யா, மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் கணேசமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர்கள் பவனந் தீஸ்வரன், சாந்தி, அனைவருக்கும் கல்வி இயக்க மேற்பார்வையாளர் எட்விஜ் மேரி, தலைமை ஆசிரியை பாத்திமா பள்ளி முன்னாள் மாணவர் மருத்துவர் கோமதி மற்றும் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந் தசேகரன், ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக் குமார். மாவட்ட பிர திநிதி வெள்ளைச்சாமி,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதா கிருஷ்ணன், சக்தி வேல் பாண்டியன், முன்னாள் தொழிற்சங்க செயலாளர் எப்போதும் வென்றான், முன்னாள் கவுன்சிலர் ராம்சங்கர் என்ற ஜெய் கணேஷ், பராசக்தி, முன்னாள் இளைஞரணி இமானுவேல், விளாத்தி குளம் சட்ட மன்றத் தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் முன்னாள் மாணவ,மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img