fbpx
Homeபிற செய்திகள்குறைகேட்பு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்

குறைகேட்பு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் – கலெக்டர் வழங்கினார்

கடலூரில் நடந்த குறை கேட்பு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடை பெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்ட றிந்து மனுக்கள் பெற்றார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பட்டா மாற்றம், முதி யோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்
தொடர்பாக 515 மனுக்களை அளித்தனர்.

அப்போது வி.காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் அளித்த மனுவில், குறிஞ்சிப்பாடி அருகே சிறுபாலையூர் பகுதியில் பரவனாறு நீர் வழித்தடத்தில் உள்ள அரசு தரிசு நிலங்கள் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனால் விவசாய நிலங்களுக்கு செல்ல முடி யாத நிலை உள்ளது.

எனவே நீர் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடநடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறைகளின் அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மனவளர்ச்சி குன்றியவர்கள், பல் வகை ஊனத்தால் பாதிக் கப்பட்டவர்கள், புற உலக சிந்தையற்றோர் முனைவாதத்தால் பாதிக்கப்பட்ட 23 மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பூர்வ பாதுகாவலர், வரையறுக்கப்பட்ட பாது காவலர் நியமன சான்றிதழ்களையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.11,500 வீதம் ரூ.23 ஆயிரம் மதிப்பீட்டில் மடக்கு சக்கர நாற்காலிகளையும் கலெக்டர் வழங்கினார்.

மேலும் மாவட்ட அளவிலான 2 சிறந்த ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கும்.
2 சிறந்த எடை யாளர்களுக்கும் ரொக்க பரிசுகள் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், பயிற்சி கலெக்டர் ஆகாஷ். மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜீ, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் லதா, உதவி ஆணையர் (கலால்) சந்திர குமார், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img