fbpx
Homeபிற செய்திகள்கலைஞர் கனவு இல்ல பணிகளை விரைவாக முடிக்க பயனாளிகளுக்கு ஆட்சியர் அறிவுரை

கலைஞர் கனவு இல்ல பணிகளை விரைவாக முடிக்க பயனாளிகளுக்கு ஆட்சியர் அறிவுரை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியம் மேலபுலம் ஊராட்சி நங்கமங்கலம் பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.61.23 லட்சம் மதிப்பீட்டில் ஏடி ரோடு முதல் உத்திரம்பட்டு வரையில் தார்சாலை புதுப்பித்தல் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது போடப்பட்டுள்ள சாலையின் ஒரு பகுதியை வெட்டியெடுத்து அதில் கலக்கப்பட்டுள்ள ஜல்லி, மணற் கலவை, தார் அளவு சரியாக கலக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்து உறுதிபடுத்தினார்.

தொடர்ந்து, மேலபுலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியினை பார்வையிட்டு மாணாக்கர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தார். பின்னர், நங்கமங்கலம் அங்கன்வாடி மையத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்பொழுது 30 குழந்தைகள் வருகை புரிந்துள்ளதை வருகை பதிவேட்டினை பார்வையிட்டு உறுதிபடுத்தினார். குழந்தைகளுக்கு சமைக்கப்படும் மதிய உணவில் காய்கறிகளின் விகிதம் சரியாக இருக்க வேண்டுமென அங்கன்வாடி மைய பணியாளருக்கு அறிவுறுத்தினார்.

மேலும், குழந்தைகளின் எடை, உயரம் சரியாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்தார். பின்னர். குழந்தைகளின் கற்றல் திறமையை ஆய்வு செய்து குழந்தைகளுடன் கலந்துரையாடி மகிழ்ந்தார்.

தொடர்ந்து, நங்கமங்கலம் நியாய விலைக்கடையில் உணவுப் பொருட்களின் தரம், இருப்பளவு உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்து, பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.

அதனை தொடர்ந்து. துறையூர் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் 11 பயனாளிகள் வீடுகள் கட்டி வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக முடிக்குமாறு பயனாளிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், பணிகளை தொடர்ந்து கண்காணிக்குமாறு பணி மேற்பார்வையாளர், ஒன்றிய பொறியாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, உளியநல்லூர் கிராம ஊராட்சி சேவை மையத்தில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் செயல்பாடுகளையும். பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், கலைஞரின் கனவு இல்லம்திட்டத்தின் கீழ் 2 பயனாளிக்கு கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கும், கறவை மாடு வாங்குவதற்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

இந்த ஆய்வுகளில் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஜெயசுதா, செயற்பொறியாளர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் தாஸ்பிரகாஷ். உதவி செயற்பொறியாளர் ஜெரால்ட் முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்.வசந்தி ஆனந்தன், மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார். உதவி திட்ட அலுவலர் மகளிர் திட்டம் வில்லியம்ஸ், வட்டாட்சியர் ராஜலட்சுமி மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img