தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலமாக 2022-&23 கல்வி ஆண்டில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட மையங்களுள் தூத்துக்குடி, பண்டாரம்பட்டி, தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளியும் ஒன்று.
அனைத்து மையங்களிலும் சிறந்த மையமாக தூத்துக்குடி ஊரக ஒன்றியத்தில் பண்டாரம்பட்டி தூ.நா.தி.அ.க. தொடக்கப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி பாராட்டுச் சான்றிதழும் கேட யமும் வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ், தன்னார்வலர் அன்ஷா மோகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை), மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை), வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மேற்பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.



