தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (நினைவகங்கள்) துறை மூலம் ரூ.77.87 லட்சம் மதிப்பீட்டில் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ்க்கு மணிமண் டபம் அமைப்பதற்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அடிக்கல் நாட்டி கல்வெட்டினை திறந்து வைத்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன், மீன்வளம், -மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித்தலைவர் கி.செந்தில் ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் தி.சாருஸ்ரீ, மாவட்ட ஊராட்சி தலைவர் அ.பிரம்மசக்தி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.