தூத்துக்குடி, புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டிமாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து, சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை நடத்தின.
மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமை வகித்தார். மகளிர் திட்ட இயக்குனர் டாக்டர் வீரபத்திரன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ஸ்வர்ணலதா முன்னிலை வகித்தனர். மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி சையது முகமது வரவேற்றார்.
மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலக உதவி இயக்குனர் பேச்சியம்மாள், திட்டம் குறித்து விளக்கினார். நெல்லை மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குனர் சண்முகசுந்தரம், திறன் மேம்பாட்டு மாவட்ட பயிற்சி உதவி இயக்குனர் ஏஞ்சல் விஜய நிர்மலா ஆகியோர் பேசினர்.
பணி நியமன உத்தரவை சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கி. பேசியதாவது: தமிழக அரசு சிறு, குறு தொழில் துவங்குவதற்கு அதிக அளவில் மானியத்துடன் கடன்கள் வழங்கி வருகிறது.
நீங்கள் வேலைக்கு சென்றால் மாதந்தோறும் சம்பளம் வாங்கலாம். சொந்தமாக தொழில் துவக்கினால் நீங்கள் அதிகம் பேருக்கு சம்பளம் வழங்கலாம். இளைஞர்களுக்கு உழைப்பு, ஆர்வம், தன்னம்பிக்கை முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.
டி.ஆர்.ஓ., அஜெய்சீனி வாசன், தி.மு.க., நகர செயலாளர் ஆனந்த சேகரன், மாமன்ற உறுப்பினர் பொன்னப்பன் வைகுண்ட பதி அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மருத்துவ அணி தலைவர் அருண்குமார். மணி, பாஸ்கர், அல்பர்ட் கலந்து கொண்டனர்.



