கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள ஒண்ணிபாளையத்தில் எல்லை கருப்புசாமி கோவிலில் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் நேற்று சாமி தரிசனம் செய்தார்
கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த கோவா முதல்வரை கோவில் நிர்வாகித்தனர் சால்வை அணிவித்தும் கோவில் நிர்வாக வழிபாட்டு முறைப்படியும் வரவேற்றனர்
அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் கார்த்திகை தீபத்தை ஒட்டி கோவை கணியூர் வானம்பாடி கலை குழுவினரின் வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சியானது நடைபெற்றது அதனை கோவா முதலமைச்சர் கண்டு களித்தார்
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கோவா முதலமைச்சர் பிரமோத் சவான், சனாதன தர்மம் என்பது ஒற்றுமையான பாரதத்தை ஒருங்கிணைத்தது. அது தமிழகத்தில் வள்ளி கும்மி கிராமிய கலை மூலம் சனாதன தர்மத்தையும் ஒழுக்கமான வாழ்வியலையும் அடுத்த தலைமுறை க்கு எடுத்து செல்லும்.
அதனை இங்குள்ள ஆன்மீக வாதிகள் செய்து வருவது பாராட்டுக்குரியது, என பேசினார்
மேலும் இந்தியா காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கலாச்சாரம், மொழி என வேறுபட்டாலும் நாம் அனைவரும் இந்திய இறையாண்மையுடன் பாரத தேசத்தின் மக்கள் என்ற உணர்வுடன் இருப்பதே நமது பெருமை என்றும் கோவா முதல்வர் பேசினார்.



