fbpx
Homeபிற செய்திகள்பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில் இலவச மருத்துவ முகாம்

பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில் இலவச மருத்துவ முகாம்

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினத்தை இரண்டு வாரங்கள் சேவை தினமாக கடைபிடிக்க பாஜக தேசிய தலைமை அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் செப்டம்பர் 28ஆம் தேதி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வடக்கு ராதவீதியில் உள்ள டி.ஏ.ருமண மண்டபத்தில் வைத்து மருத்துவ முகாம் மகளிர் அணி சார்பாக நடைபெற்றது

இதில் ஐஸ்வர்யா கருத்தரிப்பு மையம், திரவியம் எலும்பு முறிவு மருத்துவமனை, ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஆகிவற்றின் சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் பொதுமருத்துவம், புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இதில் மண்டல தலைவர் ராஜேஷ் கனி, மகளிரனி மாவட்ட தலைவி வெள்ளைத்தாய், மாவட்ட முன்னாள் பொதுச் செயலாளர் மற்றும் கிழக்கு மண்டல பொறுப்பாளர் சத்தியசீலன், மாவட்ட முன்னாள் பொருளாளர் சண்முகசுந்தரம், பாலமுருகன், டாக்டர் அரவிந்த், மாவட்ட செயலாளர் மாசாணம், உஷா தேவி, செல்வி லட்சுமி வேல், கனிக்கொறையாரா, ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் ஓம் பிரபு, மருத்துவர் அணி மாவட்ட தலைவர் பாலாஜி, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img