பிரதமரின் 75வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை யொட்டி ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் (ஜிட்டோ) ஈரோடு பிரிவு சார்பில் மரம் நடுதல், கோயில் சுத்தம் செய்தல், அழகுபடுத்துதல், பெயின்டிங் செய்தல் போன்ற சேவைகள் செய்யப்பட்டது.
வெள்ளோட்டில் உள்ள 1000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ஆதிநாத் ஜெயின் கோவிலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தூய்மைப் பணி நடந்தது.
இந்த முயற்சி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, கலாச்சார பாதுகாப்பு மற்றும் சமூக சேவையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
ஜிட்டோ தலைவர் கவுதம் போத்ரா, துணைத் தலைவர் அலோக் ஜெயின், தலைமைச் செயலாளர் விபுல் சாண்டலியா, ஒருங்கிணைப்பாளர்கள் ஆஷிஷ் காதேட், கல்பேஷ் கர்பவாலா மற்றும் சிறப்பு விருந்தினர் ஈரோடு மேற்கு (பிரிவு) பாஜக தலைவர் ஏ. சுப்பிரமணி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.



