வேப்பலோடை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை விளாத்திகுளம் சட்ட மன்ற உறுப்பினர் மார்கண்டேயன் வழங்கி மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து உ¬ ரயாற்றினார்.
நிகழ்வில் ஓட்டப்பிடா ரம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் & ஒன்றிய குழு துணைத்தலைவர் காசிவிஸ்வநாதன், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ரமேஷ், பள்ளி தலைமை ஆசிரியர் சேகர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மிக்கேல் நவமணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் கல்மேடுராஜ், சுமதி இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி தளவைராஜா, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தங்கச்சாமி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய சமூக வலைதள அணி அமைப்பாளர் முத்துராஜ் கிளை செயலாளர்கள் மாரியப் பன், திருமணிராஜா கிளை பிரதிநிதிகள் தங்கராஜா, வேல்ராஜா, உவரிராஜா, வேலுச்சாமி, கண்ணையா, கல்மேடு முருகன் உட்பட ஆசிரியர் – ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.