திருப்பூர் சிக்கண்ணா காலேஜ் இன்டோர் ஸ்டேடியத்தில் கியோகுஷின் ரியு அமைப்பின் சார்பாக தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவர்கள் பங்கு பெற்றனர்.
இதில் தமிழக அணியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வீரர்கள் சென்சாய் வி.தமிழ்ச்செல்வன் தலைமையில் கலந்து கொண்டனர். ஆண்கள் 50-60 கிலோ எடை பிரிவில் பாலச்சந்திரன், நாகரத் தினம், சத்யன், சங்கர் ஆகியோர் முதல் நான்கு இடங்களையும் கட்டா பிரிவில் 21 பரிசுகளும், குமித்தே (சண்டை) பிரிவில் 16 பரிசுகளும் வென்று சாதனை படைத்தனர்.
போட்டியின் சிறப்பு விருந்தினராக பிலிப்பைன்ஸ நாட்டிலிருந்து வருகை புரிந்திருந்த கியோகுஷின் ரியு உலகளாவிய இயக்குனர் சீகான் ஸ்டீவன் ஃபூ பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
மேலும் விழாவில் பயிற்சியாளர் தமிழ்ச்செல்வனுக்கு கிளைத் தலைவருக்கான சான்றிதழ் மற்றும் நியமன கடிதம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை சென்சாய் சாமிவேல், பயிற்சியாளர்கள் ராஜா, மணிகண்டன், பொன்னர், ராஜலிங்கம் ஆகியோர் பாராட்டினர்.