ஒட்டப்பிடாரம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் மாவட்ட கலெக்டரின் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்து 258 பயனாளி களுக்கு ரூ.79 லட்சத்து 3 ஆயிரத்து 759 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் வருவாய்த்துறை மூலம் 220 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா. பட்டா மாறுதல் உத்தரவு, உட்பிரிவு, நத்தம் நகல், ஆதிதிராவிடர் நத்தம் பட்டா, பிற்படுத்தப் பட்டோர் நத்தம் பட்டா.
தலா ஒருவருக்கு புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்று, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 18 பேருக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, 7 பேருக்கு இயற்கை மரண நிவாரண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிக்கு உத வித்தொகை, 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவி, ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சுயதொழில் பயிற்சி பெற்ற 8 பேருக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 2 பேருக்கு தையல் இயந்திரங்கள், மாவட்ட பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மூலம் ஒருவருக்கு மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 3 பயளாளிகளுக்கு இடுபொருட்கள், தோட்டக்கலை துறை மூலம் பயனாளிகளுக்கு இடுபொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டது.
முகாமில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், கோவில் பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், யூனியன் துணை சேர்மன் காசிவிஸ்வநாதன், வேடநத்தம் பஞ்சாயத்து தலைவர் கற்பகவள்ளி, வேளாண்மை இணை இயக்குநர் பால சுப்பிரமணியன்.
மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு) சஞ்சீவிராஜ் மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், பொதுமேலாளர் (மாவட்ட தொழில் மையம்) ஸ்வர்ணலதா, தாசில்தார் சுரேஷ், சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், யூனியன் ஆணையாளர் சிவபாலன், கூடுதல் ஆணையாளர் கிரி, ஒன்றிய கவுன்சிலர் கரியமால் அழகு உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப் பட்டிருந்த திட்ட விளக்கக்கண்காட்சி அரங்குகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டார்.