தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக் குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் புதிய தார்சாலை, பேவர்பிளாக் சாலை, கால்வாய், மின் விளக்கு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு பணிகள் முழுமையாக நிறைவேற்றும் வகையில் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளை மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் போல்பேட்டை சி.வ குளம், ரஹ்மத் நகர், ஞானபரமேஸ்வரி காலணி, குட்டத்து மாடசாமி கோவில், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனயைடுத்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அலுவல் கூட்ட அரங்கில் அதிகாரி களுடன் கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணை யர் தினேஷ்குமார், ஆகியோர் கலந்து ரையாடினார்கள்.
அதில் மழை காலத்திற்கு முன்பு முழுமையான கட்டமைப்பு பணிகளை முடிக்க வேண்டும். எந்த பகுதியிலும் எதிர்பாராத வகையில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் நலன் கருதி சாலைகளை முழுமையாக சீரமைத்து போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் அனைத்து தரப்பினரும் சென்று வரும் வகையில் முறைப்படுத்துவது மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரம் சிறு வணிகர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர்.
அவர்களுக்கு முறையாக 1500 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு அவர்களுக்குரிய அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையோர கடைகள் அமைப்பதற்கு பலர் கோரிக்கை வைத்துள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கூடுதலாக வியாபாரிகள் நலன் கருதி கடைகள் வைப்பதற்கு அனுமதி வழங்குவது, சிறு தொழில் வணிகர்களுக்கு தொழல்கடனாக 10 ஆயிரம் முதல் வழங்கப்பட்டு அவர்களுக்குரிய வங்கியில் முறையாக செலுத்துபவர்களுக்கு 50 ஆயிரம் வரை வழங்குவதற்கான வழிவகை செய்யப்படுகிறது.
மாநகராட்சி பகுதியை மாசு இல்லாத நிலையை உருவாக்கி பசுமையை ஏற்படுத்தி மக்கள் நலனை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை அலுவலர் வீரபுத்திரன், மாநகராட்சி பொறியாளர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், உதவி ஆணையர் சேகர், ஸ்மார்சிட்டி திட்டம் ரெங்கநாதன், மாநகராட்சி நகர்நல அலுவலர் சுமதி, ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், அரசுத்துறை அதிகாரிகள் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.