தூத்துக்குடியில் சமீப நாட்களாக புல்லட் இருசக்கர வாகனத் தில் அதிக சத்தம் எழுப்பும் சைலன்ஸ் சர்களை பொருத்தி கொண்டு பொதுமக்கள் மற்றும் சக வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற் படுத்தும் விதத்தில் இளைஞர்கள் வாகனங்களை ஓட்டி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கும், தூத்துக்குடி போக்குவரத்து காவல்துறையினருக்கும் வந்த புகார்களை தொடர்ந்து நேற்றைய தினம் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் தலைமையில் போக்குவரத்து காவலர்கள் அடங்கிய குழு நகரின் முக்கிய பகுதிகளான குரூஸ் பர்னாந்து சிலை சிலை திரேஸ்புரம், காமராஜ் கல்லூரி மற்றும் நான்காம் ரயில்வே கேட் பகுதிகளில் வாகன சோதனை நடத்தி அதிக சத்தம் எழுப்பும் புல்லட் வாகனங்களின் சைலன்சர்களை பறிமுதல் செ ய்தும் மிதமான ஒலியெழுப்பும் சைலன்ஸ்களை பொருத்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
இந்த வாகன சோதனையின் போது 43 புல்லட் இருசக்கர வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பும் சைலன்ஸர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வாகன சோதனையில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன் போக்குவரத்து தலைமை காவலர் ரவிகுமார் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஈடுபட்டனர்.