Homeபிற செய்திகள்கோவை எல்என்டி பைபாஸ் சாலையில் எத்தனால் கொண்டு சென்ற லாரி விபத்து

கோவை எல்என்டி பைபாஸ் சாலையில் எத்தனால் கொண்டு சென்ற லாரி விபத்து

L&T பைபாஸ் சாலையில் எத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து” – 1 மணி நேரத்திற்கும் மேலாக வெளியேறும் எத்தனால் செட்டிபாளையம் பகுதியில் தீ விபத்து அபாயம்

சேலத்தில் இருந்து பாலக்காடு சென்ற போது நேர்ந்த விபத்து: ஓட்டுநர் கண் அசதியே காரணமா? – தீயணைப்புத் துறையினர விரைவு!

கோவை புறநகர் பகுதியான L&T பைபாஸ் சாலை, செட்டிபாளையம் அருகே சேலத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு நோக்கி எத்தனால் (Ethanol) ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலத்தில் இருந்து பெருமளவு எத்தனால் திரவத்தை ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று கேரள மாநிலம் பாலக்காடு நோக்கிச் சென்று கொண்டு இருந்தது. கோவை L&T பைபாஸ் சாலையில் செட்டிபாளையம் பகுதியை லாரி கடந்து சென்ற போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
​அதிகாலை அல்லது நீண்ட தூரப் பயணத்தின் காரணமாக ஓட்டுநருக்கு ஏற்பட்ட கண் அசதியே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்ததில், லாரியின் டேங்கரில் ஏற்பட்ட சேதம் காரணமாக உள்ளே இருந்த எத்தனால் திரவம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து வெளியேறி அருகிலுள்ள காலி இடத்தில் தேங்கிக் கொட்டிக் கொண்டு இருக்கிறது.

​எத்தனால் என்பது எளிதில் தீப்பற்றக்கூடிய (Highly Flammable) ரசாயனத் திரவம் என்பதால், அப்பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கடும் அச்சமடைந்து உள்ளனர்.
​
விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் செட்டிபாளையம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img