fbpx
Homeபிற செய்திகள்புதிய ‘இன்னோவா கிறிஸ்டா’ கார் முன்பதிவு துவக்கம்

புதிய ‘இன்னோவா கிறிஸ்டா’ கார் முன்பதிவு துவக்கம்

நியூ இன்னோவா காருக்கான முன் பதிவை துவங்குவதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. ‘நியூ இன்னோவா கிறிஸ்டா’ முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பில் வெளிவந்திருக்கிறது.

இது வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் மிகவும் கம்பீரமாகவும் அழகாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் இன்னோவா ஹைகிராஸ் மாடல் காரை அறிமுகம் செய்தது. இது பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் எலக்ட்ரிக் கார்களாக வெளிவந்திருக்கிறது.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு துணைத் தலைவர் அதுல் சூட் கூறியதாவது:
இன்னோவாவின் பயணம் கடந்த 2005-ம் ஆண்டு இந்தியாவில் துவங்கியது.

அன்று முதல் இன்று வரை அது அனைத்து தரப்பு மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற காராக இருந்து வருகிறது. நியூ இன்னோவா கிறிஸ்டா டீசல் கார் 4 வித மாடல்களில் வெளிவருகிறது.

இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் மேம்பட்ட தொழில்நுட்பம், சொகுசான பயணம் மற்றும் பாதுகாப்பை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த காராக இருக்கும்.

2 மாடல் கார்கள்

நியூ இன்னோவா கிறிஸ்டா மற்றும் இன்னோவா ஹைகிராஸ் ஆகிய 2 மாடல் கார்களையும் வாடிக்கையாளர்கள் டீலர்கள் மற்றும் ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்யலாம் என்றார்.

50 ஆயிரம் ரூபாய் முன் பணம் செலுத்தி நியூ இன்னோவா கிறிஸ்டா காரை முன் பதிவு செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் டீலர்களிடமும், www.toyotabharat.com என்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்யலாம்.

நியூ இன்னோவா கிறிஸ்டா ஜி, ஜிஎக்ஸ், விஎக்ஸ், இசட்எக்ஸ் ஆகிய 4 மாடல்களில் ஒயிட் பியர்ல் கிறிஸ்டல் ஷைன், சூப்பர் ஒயிட், சில்வர், ஆட்டிட்யூட் பிளாக், அவன்ட் கார்ட் ப்ரான்ஸ் ஆகிய 5 வண்ணங்களில் கிடைக்கின்றன.

படிக்க வேண்டும்

spot_img