கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கே.என்.ஜி.புதூர் பிரதான சாலை, வயலட் கார்டன் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கொசு ஒழிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்து, அவர்களுக்கான அறிவுரைகளை வழங்கினார்.
உடன் மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி, உதவி ஆணையர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் (பொ) விமலா, மணடல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் குமரேசன், சுகாதார ஆய்வாளர் பௌன்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.