கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மாங்குரோவ் காடுகள் அடங்கிய சுற்றுலா வனப்பகுதியில் வனத்துறையினர் மற்றும் மாணவர்கள் இணைந்து பறவைகள் குறித்த கணக்கெடுப்பில் 2 நாள்கள் ஈடுபட்டனர் .
அண்ணாமலைப் பல்கலை
தமிழ்நாடு அரசு வனத்துறை சார்பில் பிச்சாவரம் வனச்சரகத்தில் மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன் உத்தரவின் படி வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன் தலைமையில் வனப்பணியாளர்கள், பறவைகள் ஆர்வலர்கள் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மைய மாணவர்கள் என சுமார் 40 பேர் கலந்து கொண்டு வெளிநாடு மற்றும் உள்நாட்டு பறவைகளை கணக்கெடுக்கும்பணியில் ஈடுபட்டனர்.
வனக்காப்பாளர்கள் ராஜேஷ்குமார், சரண்யா, அபிராமி, சரளா, வனக்காவலர் பால கிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் 5 குழுக்கள் பிச்சாவரம் மாங்குரோவ் வனப்பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தினர்.
கணக்கெடுப்பில் 83 வகையான பறவைகள் இனங்கள் பத்தாயிரத்துக்கும் மேற் பட்ட எண்ணிக்கையில் இருப்பது இரண்டு நாள் கணக்கெடுப்பில் தெரியவந்தது.இவற்றில் 15க்கும் மேற்பட்டவை வெளிநாட்டு பறவைகள் என கண்டறியப்பட்டன.