Homeபிற செய்திகள்13,563 மாணவர்களுக்கு ‘சிகரம் நோக்கி’ உயர்கல்வி வழிகாட்டுதல் பயணம்

13,563 மாணவர்களுக்கு ‘சிகரம் நோக்கி’ உயர்கல்வி வழிகாட்டுதல் பயணம்

கோவை மாவட்டத்தில் 9, 11-ம் வகுப்பு பயிலும் 13,563 மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘சிகரம் நோக்கி’ என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் பயணத்தை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் நேற்று தொடங்கி வைத்தார்.
இதற்காக மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, துணை ஆட்சியர் சங்கீதா, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் காயத்ரி, மாவட்ட கல்வி அலுவலர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜனவரி 31-ம் தேதி வரை நடைபெறும் இப்பயணத்தில் தொழில் நிறுவனங்கள், நீதித்துறை, வேளாண்மை, தொல்லியல், பாதுகாப்புப் படைகள், ஊடகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த இடங்களை மாணவர்கள் பார்வையிட்டு, எதிர்கால கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து அறிந்துகொள்ள உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img