கோயம்புத்தூர் ஒய்டபுள்யூ சிஏ (இளம் கிறிஸ்தவ மகளிர் சங்கம்) ஆண்டு பொது கூட்டம், நாளை (4ம் தேதி) மாலை 5 மணிக்கு அவிநாசி ரோடு ஒய்டபுள்யூசிஏ ஹாலில் இறைவணக்கத்தோடு தொடங்குகிறது. ஒய்டபுள்யூசிஏ தலைவர் ஷாமினி டேனியல் தலைமை தாங்குகிறார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஹேப்பி வேலி பிசினஸ் ஸ்கூல் இயக்குனர் டாக்டர் டி.பினா கலந்து கொண்டு உரையாற்றுகிறார். கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன.
விழாவில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு ஒய்டபுள்யூசிஏ நிர்வாகக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.



