கோவை பி.எஸ். ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான கலாச்சார விழாவான ‘கரிஷ்மா ’26’ கோலாகலமாக நடைபெற்றது.

கல்லூரியின் சேர்பெர்சன் நந்தினி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், செயலாளர் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் என்.யசோதாதேவி, முதல்வர் டாக்டர் பி.பி.ஹாரத்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பின்னணிப் பாடகர் விக்னேஷ் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்.

விழாவில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்று இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து நடைபெற்ற நிறைவு விழாவில் நடன இயக்குநரும் நடிகருமான சபரீஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மாணவிகளுடன் இணைந்து நடனமாடி உற்சாகப் படுத்தியதுடன், அவர்களின் கலைத்திறனைப் பாராட்டினார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாணவியர்களின் கலைத் திறன், படைப்பாற்றல் மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் ‘கரிஷ்மா ’26’ விழா சிறப்பாக அமைந்தது.



