கோவை ELCE Hospital – Gastro & Gyne Care மருத்துவமனையின் தலைவரும் தலைமை அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் பி. எஸ். ராஜன் அவர்களுக்கு, மருத்துவத் துறையில், குறிப்பாக அறுவை சிகிச்சை இரைப்பைக் குடலியல் துறையில் அவர் ஆற்றிவரும் சேவைகளைப் பாராட்டி, ஆதித்யா டிவி சார்பில் ‘சிறந்த அறுவை சிகிச்சை இரைப்பைக் குடலியல் நிபுணர் விருது – 2026’ வழங்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் ஆதித்யா டிவி நடத்திய ‘ஆயுத பூஜை சிறப்பு பட்டிமன்றம்’ நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பிரபல தமிழ்ப் பேச்சாளர் *திரு. ராமகிருஷ்ணன், முன்னாள் அரிமா அமைச்சரவைச் செயலாளர் **லயன் டாக்டர் பி. ராமசுப்பிரமணியன், மற்றும் *ஜனாஷா டிஎன் நிதி லிமிடெட் நிறுவனத்தின் டாக்டர் நந்தகுமார் ஆகியோர் இணைந்து டாக்டர் ராஜன் அவர்களுக்கு விருதை வழங்கிச் சிறப்பித்தனர்.
MS, DNB, FACS, FICS, FMAS, FAIS உள்ளிட்ட மருத்துவத் தகுதிகளைக் கொண்ட டாக்டர் பி. எஸ். ராஜன், மேம்பட்ட லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சைகள், அறுவை சிகிச்சை இரைப்பைக் குடலியல் மற்றும் எண்டோஸ்கோபி உள்ளிட்ட சிறப்பு மருத்துவச் சேவைகளில் அனுபவம் பெற்றவர்.
அவரது தலைமையில் ELCE மருத்துவமனை, இரைப்பைக் குடல் தொடர்பான நோய்கள் மற்றும் மகளிர் நலப் பிரச்சினைகளுக்குச் சிறப்பு மருத்துவச் சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த விருது டாக்டர் ராஜன் அவர்களின் மருத்துவப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது. நோயாளிகளுக்கு தரமான, நவீன மருத்துவச் சிகிச்சைகளை வழங்குவதில் அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கும் சேவைக்கும் கிடைத்துள்ள அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது.
இந்தச் சிறப்பான அங்கீகாரத்தால் ELCE மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு தரமான மருத்துவச் சேவைகளைத் தொடர்ந்து வழங்குவதற்கான ஊக்கமாக இந்த விருது அமைந்துள்ளது.
விருது பெற்ற டாக்டர் பி.எஸ். ராஜனுக்கு ELCE மருத்துவமனை மருத்துவர்கள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள்
வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



