Homeபிற செய்திகள்தமிழ்நாடு மின்சார வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு மின்சார வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு மின்சார வாரியம் எம்ப்ளாயீஸ் ஃபெடரேஷன் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலோசனை கூட்டம் தேனியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மின்வாரிய தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மின்சாரத்துறையில் பல்வேறு பிரிவுகளில் காலி யாக உள்ள 60 ஆயிரம் பணியிடங்களை விரைந்து நிரப்பிட வேண்டும், மின் வாரியத்தில் தேர்வு செய்து பணி நியமனம் வழங்கப்ப டாத ஐந்தாயிரம் கேங்மன்களுக்கு பணி நியமன உத்தரவை வழங்கிட வேண்டும்.

தேர்தல் வாக்கு றுதி அளித்தபடி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய எம்பிளாயீஸ் ஃபெடரேஷன் சார்பில் சுமார் 50க் கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img