தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்கள் இணைந்து 50 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு பொன் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையிலே பெண் காவலர்களின் சேவையை போற்றி மரியாதை செய்கின்ற விதமாக கோவையில் 50 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பயணம் நடைபெற்றது. நோ ஹெல்மெட், நோ ரைடு … ஃபாலோ ரோட் ட்ராபிக் ரூல்ஸ் என்ற விழிப்புணர்வுடனும் இந்த சைக்கிளிங் பயணம் அரங்கேறியது.
கோவை பிரபல சைக்கிளிங் வீரரான விஷ்ணு ராம் ஏற்பாட்டின் அடிப்படையில் இந்த சைக்கிள் பயணம் நடந்தது. மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை ஆணையாளர் சுகாசினி, சைக்கிளிங் வீரர் விஷ்ணு ராம் மற்றும் இதர சைக்கிளர்கள், காவலர்கள், பொதுமக்கள் என 120 பேர் கலந்துகொண்டனர்.
மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆரம்பித்த இந்த சைக்கிளிங் பய ணம் ஆர். எஸ். புரம், வடவள்ளி, மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், தேவராயபுரம், பேரூர் வழியாக செல்வபுரம் வந்தடைந்தனர். 50 கிலோ மீட்டர் தூரத்தினை 2 மணி நேரம் 43 நிமிடங்களில் கடந்தனர்.



