Homeபிற செய்திகள்திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற திருவண்ணாமலை பழங்குடியின இளைஞர்கள்

திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற திருவண்ணாமலை பழங்குடியின இளைஞர்கள்

விரிவான பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டும் வகையில் சமத்துவ சமதர்ம ஆட்சியை நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நமது மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் அல்லது வேலையில்லாத இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்கள் வாழ்வில் விடியலை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின் நலத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு மற்றும் சமூக-பொருளாதார நிலையினை உயர்த்தி அவர்களது வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை கட்டுதல் மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகைகள் மற்றும் கட்டணச் சலுகைகள் வழங்குதல், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்குதல், சுயதொழில் வேலைவாய்ப்பினை உருவாக்கிட பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளித்தல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பட்டப்படிப்பு, பொறியியல், தொழில்நுட்பக் கல்வி, ஐடிஐ படித்து வேலையில்லாமல் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் வாழ தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் திட்டம் வகுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், மலைப்பகுதிகளில் இயங்கிவரும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர்கள், துறைச் சார்ந்த மாவட்ட திட்ட அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களின் ஒத்துழைப்புடன் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று, தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பழங்குடியின வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் 450 நபர்களை திரட்டி திருச்சி, சேலம் மற்றும் சென்னை மாவட்டங்களில் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தின் முடிவில் தகுதிவாய்ந்த 200 பழங்குடியின இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த 13.02.2024 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தேர்வு செய்யப்பட்ட 200 பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன. பயிற்சி ஆணைகள் பெற்ற 200 பழங்குடியின இளைஞர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட கர்நாடகா மாநிலம், பெங்களூரில் NTTF (Nettur Technical Training Foundation) நிறுவனத்தின் மூலம் மூன்று மாதக்காலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியின் போது அந்த இளைஞர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் அனைத்தும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்டது.

திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்ற இளைஞர்களில், 146 இளைஞர்களுக்கு பன்னாட்டு நிறுவனமானZF Rane Automotive India Private Limited மற்றும் தமிழ்நாட்டிலுள்ள தலைச்சிறந்த இந்திய நிறுவனங்களான Shanthi Gears Limited, HDB Financial Service, Tube Investment of India (TI), KUN Capital Motors Private Limited போன்ற நிறுவனங்களின் மூலம் நேர்முக தேர்வுகள் நடத்தப்பட்டு அவர்களின் கல்வித்திறன் மற்றும் தனிப்பட்ட Computerised Numerical Control (CNC) 67 இளைஞர்களும், Customer Relationship Management (CRM) பிரிவில் 79 இளைஞர்களும் தேர்வு செய்யப்பட்டு. அவர்களுக்கான பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி, வாழ்த்தினார்.

பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்ட 146 இளைஞர்களில், 106 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் ஆவர். குறிப்பாக நமது திருவண்ணாமலை மாவட்டத்தில் 34 பழங்குடியினர் இளைஞர்களுக்கு NTTF நிறுவனத்தின் மூலம் மூன்று மாத காலம் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களில் பணி நியமன ஆணைகள் முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின இளைஞரான சரத்குமார் (25) என்பவர் தெரிவித்ததாவது:
எனது தந்தை தூசையன், தாயார் இந்திரா, நாங்கள் ஜவ்வாது மலையில் முட்னாத்தூர் கிராமத்தில் வசித்து வருகிறோம். எனது பெற்றோர்கள் விவசாயம் செய்து வருகின்றார்கள். நான் பத்தாம் வகுப்பு நம்மியம்பட்டு அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியிலும், 12 ஆம் வகுப்பு ஜமுனாமரத்தூர் வனத்துறை மேல்நிலைப் பள்ளியிலும், வேலூர் ஊரிஸ் கல்லூரியில் பிகாம் பட்டமும், வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் எம்காம் பட்டமும் பெற்றேன்.

படிப்பை முடித்துவிட்டு எனது பெற்றோருடன் விவசாயம் செய்து வந்த சமயத்தில் திருவண்ணாமலை மாவட்ட பழங்குடியினர் நலத்துறையின் மூலம் பெங்களூரில் உள்ள NTTF நிறுவனத்தின் மூலம் மூன்று மாத காலம் திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்பட்டு உணவு மற்றும் தங்கும் வசதிகள் தமிழ்நாடு அரசின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்பு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த நேர்காணலில் HDB பைனான்ஸ் சர்விஸ் நிறுவனத்தின் மூலம் சேல்ஸ் மேனேஜராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

இதற்கான பணி நியமன ஆணை கடந்த 06.07.2024 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக எங்களைப் போன்ற பழங்குடியின இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்பட்ட அதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்குகின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் எங்களது பொருளாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது. மேலும் இதுபோல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் அவருக்கு பழங்குடியின இளைஞர்கள் சார்பாகவும் எனது குடும்பத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த குமாரசாமி என்பவர் தெரிவித்ததாவது:
எனது பெயர் குமாரசாமி வயது 24, அப்பா பெயர் குப்புசாமி, தாயார் பெயர் ராஜம்மாள். நாங்கள் ஜவ்வாதுமலை வட்டம் நம்மியம்பட்டு ஊராட்சியில் விவசாயம் செய்து வசித்து வருகிறோம். நான் பன்னிரண்டாம் வகுப்பு ஜவ்வாது மலையில் உள்ள பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியிலும் வேலூர் ஊரீஸ் கல்லூரியில் பிஎஸ்சி பட்டம் பெற்றேன். அதனைத் தொடர்ந்து படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் விவசாயம் செய்து வந்தேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பழங்குடியினர் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தது. பின்பு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் நேர்காணல் நடத்தப்பட்டு HDB பைனான்ஸ் நிறுவனத்தில் Senior sales Manager ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.

எங்களைப் போன்ற பழங்குடியின இளைஞர்களுக்கு இது போன்ற நிகழ்வுகள் வாழ்வில் முன்னேற்றம் அடைய மிகவும் உதவிகாரமாக இருக்கும். இது போன்ற எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொகுப்பு:
க.சரவணன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருவண்ணாமலை மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img