Homeபிற செய்திகள்டிரினிட்டி கண் மருத்துவமனையில் நவீன கருவி அறிமுகம்

டிரினிட்டி கண் மருத்துவமனையில் நவீன கருவி அறிமுகம்

கோவை ஆர்.எஸ்.புரம் டி. பி. ரோட்டில் உள்ள டிரினிட்டி கண் மருத்துவமனையில் புதிதாக காண்டுரா லாசிக் கண் சிகிச்சை கருவி தொடங்கப்பட்டு உள்ளது. இதன் அறிமுக விழா நடைபெற்றது.

இந்த காண்டு ரா லாசிக், கண் சிகிச்சை கருவி லேசர் உதவியுடன் பார்வை குறைபாட்டினை சரி செய்யக் கூடியது. விழித்திரையை துல்லியமாக அளவீடு செய்ய நீர் முனை வழிகாட்டுதலை மேற்கொள்கிறது. பார்வையை தேவையான அளவிற்கு தனிப்பட்ட வகையில் சரி செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது.

இதன் அறிமுக விழாவில், தலைமை விருந்தினராக கோவை தி ஹிந்து விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவின் பொது மேலமாளர் சிவக்குமார் பங்கேற்றார்.

விழாவில் டிரினிட்டி சிறப்பு கண் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுனில், மருத்துவ இயக்குனர் டாக்டர் முகமது சபாஜ், இணை இயக்குனர் பிரவீன் தனபால், மருத்துவ செயல் இயக்குனர் டாக்டர் மதுசுதன், முதுநிலை ஆலோசகர் டாக்டர் மும்தாஜ், டாக்டர் அனுபிரீத்தி ஜெயின், தலைமை செயல் அதிகாரி ஜாஸ்மின், அபக் மீடியா நிர்வாக இயக்குனர் பாலகிருஷ்ணன் சண்முகம் உள்ளிட்டோர் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img