திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ பாஸ்கர பாண்டியன் பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் தொடர்பான களப் பணியினை மேற்கொண்டார்கள்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் நேற்று திருவண்ணா மலை ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட அய்யம் பாளை யம் புதூர் ஊராட்சியில் பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகளை பள்ளி யில் சேர்த்தல் தொடர்பான களப்பணியினை மேற்கொண்டு கல்வி கற்பதன் அவசியம் குறித்து மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் எடுத்துரைத்து, மாணவர்களை பள்ளிக்கு அழைத் துச் சென்று சீருடைகள் மற்றும் புத்தகங்களை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது-:
திருவண்ணாமலை மாவட் டத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை 5 ஆயிரத்து 156 மாணவர்கள் இடைநின்ற மாணவர்களாக அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்க ளுடைய விவரங்கள் அனைத்தும் எமிஸ்(EMIS) இணையதளத்தில் உள்ள பொது தரவு தளத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்களால் வீடுதோறும் சென்று கணக்கெடுப்பு மேற்கொண்டதன் அடிப்படையில், 1001 மாணவர்கள் பள்ளியில் மீண்டும் சேர்க்கப்பட்டு, கல்வி பயின்று வருகிறார்கள்.
இவர்களைத் தவிர்த்து, இன்னும் சர்வே செய்யப்பட வேண்டிய மாணவர்களின் எண் ணிக்கை 4155. கடந்த 01.10.2024 முதல் மாவட்டம் முழுவதும் இந்த 4155 பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களை சர்வே செய்யும் பணி ஆசிரியர்களாலும், ஆசிரியர் பயிற்றுனர்களாலும் மேற்கொள்ளப்பட்டு, அதன் விவரங்கள் சர்வே செயலியில் பதி வேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய நிலவரப்படி, 2423 மாணவர்கள் தற்போது சர்வே செய்யப்பட்டுள்ளனர். மற்ற மாணவர்களையும் பள்ளியில் சேர்க்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்னும் கணக்கெடுப்பு செய்ய வேண்டிய 1732 மாணவர்களையும் இம்மாத இறுதிக்குள் சர்வே செய்து, அவர்களை பள்ளியில் மீண்டும் சேர்க்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த 1732 மாணவர்களில் 954 மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து இடைநின்றுள்ளதாக புள்ளி விவரம் உள்ளது.
ஆகவே, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எமிஸ் வருகை பதிவையும் Manual வருகை பதிவையும் வகுப்பு வாரியாக ஒப்பீடு செய்து எமிஸ் வருகைப்பதிவின் எண்ணிக்கை Manual வருகை பதிவின் எண்ணிக் கையை விட குறைவாக இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட அந்த மாணவர்களை எமிசின் (EMIS) பொது தரவு தளத்திலிருந்து (Common Pool) சார்ந்த பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) மூலம் தனியார் பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அய்யம் பாளையம் புதூர் ஊராட்சியை பொறுத்தவரையில் சுமார் 51 மாணவர்கள் பள்ளியிலிருந்து இடைநின்று இருக்கிறார்கள்.
இப்பகுதிக்குச் முதன்மை கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய்த்துறை அலு வலர்கள், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் துணையுடன் இப்பகுதியில் இடைநின்ற மாணவர்களிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் கல்வி கற்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், வேடியப்பனூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் சேர்க்கப்பட்டனர்.
மேலும், இடைநின்ற 51 மாணவர்களும் தொடர்ந்து பள்ளிக்கு வருகை புரிகின்றனரா என்பதை நாள்தோறும் ஆய்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு பள்ளிக்கு அனுப்பாத பெற் றோர்களின் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தற்பொழுது பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்க ளுக்கு ஆசிரியர்கள் மூல மாக சிறப்பு வகுப்புகள் நடத்தப் பட்டு, அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் இன்றையதினம் மாவட்டம் முழுவதும் பள்ளிக்கல்வித் துறையின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், வருவாய்த்துறையினர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர் ஆகியோர் மூலமாக அனைத்து பகுதிகளிலும் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் இம்மாத இறுதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்கள் அனைவரையும் 100 சதவீதம் பள்ளியில் சேர்க்கும் பணி நிறைவடையும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்கள்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அய்யம்பாளையம் புதூர் ஊராட்சியில் பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல் தொடர்பான களப்பணியினை மேற்கொண்டு கல்வி கற்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து பள்ளிக்கு அழைத்து சென்று பாடப்புத்தகம் மற்றும் சீருடைகளை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு துறைசார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.