கோயம்புத்தூர் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச அளவிலான புகழ்பெற்ற கல்லூரி ஹேக்கத்தானான ஹார்வர்டு 2024ல், கோயம்புத்தூரில் உள்ள அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆல்-ட்ராக் கிராண்ட் பரிசைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஸ்டான்போர்ட், எம் ஐ டி, ஹார்வர்ட் மற்றும் டொராண்டோ பல்கலைக் கழகம் ஆகிய புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் பங்கேற்ற இப்போட்டியில், அம்ருதாவின் அணி “ஓவரால் பெஸ்ட் ஹேக்“ விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற குழுவில், அம் ருதா விஸ்வ வித்யா பீடம் கோயம்புத்தூர் வளாகத் தைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு, பி.டெக் செயற்கை நுண்ணறிவு பிரிவைச் சேர்ந்த அம்ருத் சுப்ரமணியன், கோட்டாக்கி ஸ்ரீகர் வம்சி, சுக்கா நவநீத் கிருஷ்ணா மற்றும் சூர்யா சந்தோஷ் குமார் ஆகியோர் அடங்குவர்.
அவர்களால் வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் “Sustainify”, கழிவு மறுசுழற்சி மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு செயலிக்காக பாராட்டப் பட்டனர்.